தோனிக்கு 7 போல்... KGF யாஷின் ராசியான நம்பர் என்ன தெரியுமா?

Wed, 07 Aug 2024-5:48 pm,

கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான யாஷ் சமீபத்தில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றிருந்தார். 

 

ஒருநாளில் அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர்.

 

அதாவது, யாஷின் இந்த கோயில் சுற்றுப்பயணம் என்பது ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்தவொரு புதிய திரைப்படத்தின் வேலையை தொடங்குவதற்கு முன்பாக, கோயில்களுக்குச் செல்வது யாஷின் வழக்கமாகும். 

 

எனவே, தற்போது யாஷ் கோயில், கோயிலாக செல்வதை கண்டு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், யாஷின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் படக்குழுவானது படம் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளது. 

 

படம் ஜனவரியில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் படப்பிடிப்பு குறித்து அப்டேட் இல்லாமல் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

 

யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று பெங்களூரில் தொடங்க உள்ளது. அதாவது, வருடத்தின் 8ஆம் மாதத்தின் 8ஆம் நாள் அன்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், இந்த வருடத்தின் கூட்டுத்தொகையும் 2+0+2+4 = 8 ஆகும். 

 

எனவே, 8-8-8 என்ற நியூமராலஜியின்படி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. யாஷுக்கு ராசியான நம்பரான 8 என்பது குறிப்பிடதக்கது. மேலும் இது அவரது பிறந்த  தேதியுடன் பொருந்தி போகிறது. 

 

கடந்த ஜனவரி மாதம் அவர் பிறந்த நாளில்தான்,  'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' (Toxic: A Fairy Tale For Grown-ups) படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link