Rivers: நதிகளும், வியக்க வைக்கும் அவற்றின் பல்வேறு பரிணாமங்களும்...
இறுகிய பனிப்பாறைகள் புவியீர்ப்பினால் நகரத் தொடங்குவதனால் பனியாறுகள் உருவாகின்றன. பனியாறுகளைப் பார்க்க துருவப் பகுதிகளுக்கு சுற்றுலா போகலாமா?
நதிகளின் நிறம் மாறுபட்டு காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு... ஆராய்ந்து பார்த்தால் அனைத்தும் அறியலாம்...
நீர் சுழற்சியின் ஒரு கூறான ஆறு இயற்கையானது... மக்களின் உயிர் காக்கும் நதியானது மழைக்காலங்களில் கரை புரண்டோடி உயிரையும் பறிக்கும்.... இயல்பான வாழ்க்கையையும் தடம் புரட்டிவிடும்...
நதிகள் மனிதர்களை சுத்தப்படுத்தினால், மனிதர்களோ ஆறுகளை ஆற்றொணா கொடுமைக்கு ஆளாக்குகிறோம். ஆனால் ஆறுகள் அதற்காக கவலைப்படுவதுமில்லை. கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்கு இந்திய அரசு நமாமி கங்கே என்று பெயரிட்டு முன்முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது...
இது இணைவுமில்லை... பிரிவுமில்லை... நதிப்போக்கும் சித்தன்போக்கும் சிவன் போக்காம்....
இதுதான் சொர்க்கமா? இல்லை இது நதியாம்! நம்ப முடியவில்லை... ஆனால் நிறம் மாறும் நதிகள் சொல்லும் பாடங்கள் அர்த்தமுள்ளவை...
வற்றா ஜீவநதி கங்கை யுகங்களாய் ஓடினாலும், ஒருபோதும் சலிப்படைவதில்லை... சலிப்பறியா ஓட்டத்திற்கு கங்கையே முன்னுதாரணம்....
மனிதர்களில் எத்தனை விதமோ அத்தனை வித நதிகளும் உண்டோ?
விண்ணகரில் இருந்தல்ல, வானூர்தியில் இருந்து ஆற்றின் தோற்றம்...
வானில் இருந்து ஒரு நதியின் தோற்றம்... இந்த தோற்றம், நதியின் தோற்றுவாய் தோற்றம் அல்ல, விண்ணில் இருந்து மண்ணில் காணும் பிரம்மபுத்திராவின் அழகிய தோற்றம்...
குடகு மலையில் தோன்றி தமிழகத்தை வளப்படுத்தும் காவிரி... காவிரி நதியின் கல்லணை இன்றும் பெருமையுடன் பேசப்படுகிறது...