சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு நேரம் சரியில்லை, சங்கடங்கள் அதிகரிக்கும்
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி நுழையும் போது, அந்த நேரத்தில் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறார் என்பதை வைத்து சனியின் நிலை தீர்மானிக்கப்படும் என்பது ஜோதிட விதி. ஒருவரது ராசியிலிருந்து சந்திரன் முதல், ஆறு, பதினொன்றாமிடத்தில் இருப்பவர்களுக்கு தங்க அம்சம் கிடைக்கும். ஒருவரது ராசியிலிருந்து சந்திரன் இரண்டாவது, ஐந்தாம் அல்லது ஒன்பதாம் இடத்தில் இருப்பவர்கள் மீது சனியின் வெள்ளி அம்சம் காணப்படுகிறது. ராசியிலிருந்து மூன்று, ஏழாம், பத்தாம் இடங்களில் சந்திரன் இருக்கும்போது, செம்பு அம்சம் உண்டாகிறது. மேலும் ராசியிலிருந்து நான்காம், எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் சந்திரன் இருப்பவர்களுக்கு சனியின் இரும்பு அம்சம் உருவாகிறது.
சனியின் இரும்பு அம்சத்தின் தாக்கத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அதனால் அவர்களின் வரவு செலவும் பாதிக்கப்படும். சேமித்து வைத்த பணத்தையும் செலவழிக்க வேண்டி வரலாம். இந்த ஆண்டு திடீரென்று எதிர்பாராமல் நடக்கும் சில நிகழ்வுகளால், பணம் தொடர்ந்து செலவாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக செலவு இருக்கும். இதனால் மனநிலையும் மோசமாகி குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்களும் சனியால் பாதிக்கப்படுவார்கள். இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சனியின் பாதகமான பலன்களை சந்திக்க வேண்டி வரும். இந்த ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டு சனியால் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வார்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்கள் பணியிடத்தில் அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக வேலையை மாற்றுவது பற்றி யோசிக்கலாம். மனதில் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிய ரகசியக் கவலை இருக்கும்.
2023-ம் ஆண்டு தனுசு ராசியிலும் சனியின் இரும்பு அம்சத்தின் தாக்கம் இருக்கும். இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் பணியிடத்தில் பலவிதமான குழப்பங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். இந்த வருடம் உங்களுக்கு செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஏற்படும் பலவிதமான சிக்கல்களால் மன உளைச்சல் ஏற்படலாம். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், இந்த ஆண்டு மிகவும் கவனமாக முதலீடு செய்யுங்கள், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். வீடு, மனை வாங்க நினைப்பவர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். உங்கள் பணத்தை இந்த ஆண்டு வீட்டைக் கட்டுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் செலவிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)