திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! தினேஷ் கார்த்தியின் சரவெடி
ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திகை ஆர்சிபி அணி ரீட்டெயின் செய்திருக்கிறது.
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக அவரை விடுவிக்க அந்த அணி திட்டமிட்டிருந்தது.
இருப்பினும் அந்த அணி அண்மையில் வெளியிட்ட ரீட்டெயின் பிளேயர்கள் லிஸ்டில் தினேஷ் கார்த்திக் இருந்தார்
ஆர்சிபி அணியின் இந்த முடிவு பலருக்கும் சர்பிரைஸாக இருந்தது. கமெண்டிரியில் இருக்கும் வீரரை ஏன் ஆர்சிபி ரீட்டெயின் செய்தது என பலரும் விமர்சித்தனர்.
அவர்களுக்கு விஜய் ஹசாரே போட்டியில் பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியை தழுவியிருந்தாலும் தனி ஒருவராக அதிரடியாக விளையாடி 82 பந்துகளில் 93 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராக இருப்பதை தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
அவருடைய இந்த ஆட்டத்தைப் பார்த்து ஆர்சிபி அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.