இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு மீண்டும் திருமணம்!

Sun, 18 Feb 2024-12:41 pm,

இயக்குனர் ஷங்கருக்கு மொத்தம் 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். அவர் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். 

 

ஷங்கரின் மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா. இவருக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஷங்கர் படங்களை போலவே மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது.

 

ஆனால் இந்த திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், ரோஹித் போக்ஸோ வழக்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.  இந்த பின்பு, இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

 

இந்நிலையில், நீண்ட நாட்களாக ஐஸ்வர்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. தற்போது உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

 

நடிகை அதிதி ஷங்கர் இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link