நயனை Wine உடன் ஒப்பிட்ட விக்னேஷ் சிவன்..வைரலாகும் போட்டோக்கள்!

Sat, 09 Mar 2024-12:34 pm,

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி, நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு உயிர்-உலக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதும், ஒன்றாக போட்டோக்கள் பதிவிடுவதும் வழக்கம். அப்படி, தனது மனைவி குறித்து சமீபத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளது, வைரலாகி வருகிறது. 

உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நயனுக்கு ஸ்பெஷலாக ஒரு பதிவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், “வயசாக வயசாக மெருகேறிட்டே இருக்க ஒரே விஷயம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் இதில் மறைமுகமாக குறிப்பிடுவது, “ஒன்னு நயன், இன்னொன்னு வைன்” எனபதுதான். 

நயன்தாரா, இந்த பதிவை தனது ஸ்டோரியில் ரீ-ஷேர் செய்துள்ளார். தற்போது நயன், தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக நயன்-விக்னேஷ் சிவனுக்கு விவாகரத்து ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. காரணம், விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயன்தாராவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. 

விக்னேஷ்-நயனின் தற்போதைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link