தீபாவளியன்று திரைக்கு வரும் 6 பெரிய படங்கள்!! முழு லிஸ்ட் இதோ..
)
கவின் நடித்திருக்கும் படம், ப்ளடி பெக்கர். இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.
)
நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ப்ளடி பெக்கர் திரைப்படம், வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை ஒட்டி வெளியாகிறது.
)
ஜெயம் ரவி நடித்திருக்கும் படம், பிரதர். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இதில், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ராஜேஷ்.எம் இயக்கியிருக்கும் இந்த படம், வரும அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், அமரன். இதில் முக்கிய இந்திய ராணுவ வீரராக இருந்தவர், மேஜர் முகுந்தன். அமரன் திரைப்படம், அவரது கதைதான்.
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், லக்கி பாஸ்கர். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இதில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக வருகிறார். இந்த படம், வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சிங்கம் அகெய்ன் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் சல்மான் கான் கேமியோ கேரக்டரில் வருவதாக கூறப்படுகிறது. இந்த படம், வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பூல் புலாயா 3 திரைப்படம், வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தி மொழியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கார்த்திக் ஆர்யன், தீப்தி டிமிட்ரி, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.