மகளிருக்கான ட்ரெண்டிங் ஆடைகள்! இந்த தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் வாங்கலாம்?
Shahara Set:
ஒரு குர்த்தாவுடன் பெரிய பேண்ட் கொண்ட ஆடைக்கு பெயர், சஹாரா. ஸ்டைலாகவும், அதே சமயத்தில் உங்களுக்கு சௌகரியமாகவும் இருக்க, இந்த வகை ஆடையை வாங்கலாம்.
புடவை:
எந்த காலத்தில் எவ்வளவு ட்ரெண்ட் மாறினாலும், எப்போதும் மாறாமல் இருக்கும் ட்ரெண்ட், புடவை கட்டுவதுதான். உங்களுக்கு பிடித்த வகையில் இந்த தீபாவளிக்கு புடவை வாங்கி மகிழலாம்.
லெஹங்கா:
லெங்காவிலேயே இப்போது சோலி வகை ஆடைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இது, தீபாவளி பண்டிகைக்கு ஏற்ற பிரம்மாண்டமான உடையாகும்.
குர்த்தா:
பலாசோ வகை பேண்ட் உடன், அல்லது சாதாரண ஜீன்ஸ் பேண்ட் உடன் ஒரு குர்த்தா டாப்பை அணிந்தால் பார்ப்பதற்கு ட்ரெண்டியாகவும் அழகாகவும் இருக்கும்.
கஃப்தான்:
கஃப்தான் வகை ஆடைகள், பல வண்ணங்களை அடக்கிய பிரம்மாண்டமான ஆடையாக இருக்கிறது. ஸ்டைலான ஆடைகளை விரும்பும் ஆட்கள் இந்த ஆடையை அணியலாம்.
இண்டோ வெஸ்டர்ன் :
கொஞ்சம் ஃபேஷன், கொஞ்சம் கலாச்சாரம் கலந்த உடைதான் இண்டோ-வெஸ்டர்ன் ஆடை.
கவுன்:
சம்கி, கற்கள் பதித்த பெரிய கவுனை வாங்கலாம். இவை, பண்டிகை காலங்களுக்கு ஏற்ற ஆடைகளாக அறியப்படுகின்றன.
அனார்க்கலி:
அனார்க்கலி ஆடை, பழங்காலத்தில் இருந்து உடுத்தப்பட்டு வருகிறது. இதனை வரும் தீபாவளிக்கு போட்டு அசத்தலாம்.