ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் தமிழக அரசு வழங்கும் “கூட்டுறவு பொங்கல் தொகுப்பு”

Wed, 18 Dec 2024-10:17 pm,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் ₹199, ₹499, ₹999 மதிப்புள்ள பொங்கல் மளிகை தொகுப்புகள் விற்பனையாக உள்ளன. அதுக்குறித்து பார்ப்போம்.

இந்த "கூட்டுறவு பொங்கல்" தொகுப்பு என்பது தமிழக கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும். 

"கூட்டுறவு பொங்கல்" என்ற திட்டத்தின் கீழ் மளிகைப்பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை மூன்று வகையாக விற்பனை செய்யவுள்ளனர். அதாவது இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாக விற்பனை செய்யப்படும்.

இனிப்பு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி (BPT 43) - 500 கிராம், பாகுவெல்லம் - 500 கிராம், ஏலக்காய் - 5 கிராம், முந்திரி - 50 கிராம், ஆவின் நெய் - 50 கிராம், பாசிபருப்பு - 100 கிராம், உலர் திராட்சை -50 கிராம் என சிறிய பையுடன் 7 பொருட்கள் அடங்கிய இந்த பொங்கல் தொகுப்பு ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

சிறப்பு பொங்கல் தொகுப்பி‌ல் மஞ்சள் தூள்-50 கிராம், சர்க்கரை-500 கிராம், துவரம் பருப்பு-250 கிராம், கடலைப் பருப்பு-100 கிராம், பாசிப் பருப்பு-100 கிராம், உளுத்தம் பருப்பு-250 கிராம், கூட்டுறவு உப்பு-1 கிலோ, நீட்டு மிளகாய்-250 கிராம், தனியா-250 கிராம், புளி-250 கிராம், பொட்டுக்கடலை-200 கிராம், மிளகாய் தூள்-50 கிராம், செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர், கடுகு-100 கிராம், சீரகம்-50 கிராம், மிளகு-25 கிராம், வெந்தயம்-100 கிராம், சோம்பு-50 கிராம், பெருங்காயம்-25 கிராம் என மளிகை பையுடன் 19 பொருட்கள் அடங்கிய இந்த பொங்கல் தொகுப்பு ரூ.499 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

பெரும் பொங்கல் தொகுப்பி‌ல் மஞ்சள் தூள்-50 கிராம், சர்க்கரை-500 கிராம், கூட்டுறவு உப்பு-1 கிலோ, துவரம் பருப்பு-250 கிராம், உளுத்தம் பருப்பு-250 கிராம், கடலைப் பருப்பு-200 கிராம், பச்சைப் பட்டாணி-100 கிராம், சிறு பாசிப் பருப்பு -250 கிராம், வெள்ளை சுண்டல்-200 கிராம், வேர்க்கடலை-200 கிராம், பொட்டுக்கடலை-200 கிராம், வரமிளகாய்-250 கிராம், புளி-200 கிராம், தனியா-250 கிராம், கடுகு-100 கிராம், மிளகு-50 கிராம், சீரகம்-50 கிராம், வெந்தயம்-100 கிராம், சோம்பு-50 கிராம், ஏலக்காய்-5 கிராம், செக்கு கடலை எண்ணெய்-1/2லிட்டர், வரகு-500 கிராம், சாமை-500 கிராம், திணை-500 கிராம், ரவை-500 கிராம், அவல்-250 கிராம், ராகிமாவு-500 கிராம், கோதுமை மாவு -500 கிராம், ஜவ்வரிசி-200 கிராம், வறுத்த சேமியா-170 கிராம், மல்லி தூள்-50 கிராம், சாம்பார் தூள்-50 கிராம், மிளகாய் தூள்-50 கிராம், பெருங்காயத் தூள்-25 கிராம் என பெரிய மளிகை தொகுப்புடன் 34 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ரூ.999 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பெரும் பொங்கல் தொகுப்புடன் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை விலையில்லாமல் வழங்கப்படும்.

தமிழக அரசு சார்பில் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் ஏழை ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மளிகைப்பொருட்கள் என்பது வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே தேவைப்படும் அனைத்து மக்களும் வாங்கிக்கொள்ளுங்கள். அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக பொங்கல் பண்டியைகை கொண்டாடி மகிழுங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறுபுறம் தமிழக அரசு சார்பில் இலவசமாக ரேஷன் கடை மூலமாக பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இலவச பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும் எனக் கூறப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link