கேரட்டின் அசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
கேரட் கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. கேரட்டில் உள்ள லுடீன், லைகோபீன் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கண்பார்வையை மேம்படுத்த உதவும்.
கேரட் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடை இழக்க உதவுகிறது.
கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலையும் தடுக்கலாம்.
கேரட் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. கேரட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் கேரட் நல்லது. இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.