தயிருடன் இந்த 4 பொருட்களைச் சேர்த்துச் சாப்பிடவே சாப்பிடாதீங்க...மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!
)
பலரும் தங்கள் உணவில் ருசிக்கேற்ப பல்வேறு பொருட்களை சேரத்து சாப்பிடுகின்றனர். அது நல்ல ருசியைக் கொடுத்தாலும் உடலுக்கு தகாமல் இருக்கலாம்.
)
தயிருடன் ஆரஞ்சு, திராட்சை அல்லது எலுமிச்சை போன்ற புளிப்புப் பழங்களைத் தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுக்கு வாயுவை உண்டாக்கும் மற்றும் குடல் செரிமானமாகாது.
)
தயிருடன் சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிடப் பலரும் விரும்புகின்றனர். இது வயிற்றுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. தயிரை உட்கொள்வது செரிமானத்தை மெதுவாக்குகிறது.
தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் உடலில் ஒவ்வாமை அல்லது வீக்கம் போன்ற பல்வேறுப் பிரச்சனைகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.
தயிருடன் உருளைக்கிழங்கு வைத்துச் சாப்பிட்டால் வயிற்றுக்குப் பிடிப்பு ஏற்படும் மற்றும் வாய்வு அதிகரிக்கும். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் உள்ளன. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளன.
தயிர் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டும் வெவ்வேறு செரிமான காரணிகளைக் கொண்டுள்ளது. இவற்றை ஒன்றாக உட்கொண்டால் வயிற்று வலி ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
தயிருடன் மீன் வைத்துச் சாப்பிட்டால் செரிமானம் மிகவும் மோசமாகும். இதுபோன்று ஒன்றாகச் சாப்பிடுவதால் உடலுக்கு வாயு மற்றும் எடை போன்ற பிரச்சனைகள் வர அதிகம் வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)