இந்த 5 விஷயங்களை பற்றி உங்கள் மனைவியிடம் ஒருபோதும் பேச கூடாது!
உன்னை ஏன் திருமணம் செய்து கொண்டேன்.. உன்னால் என் வாழ்க்கை வீணாக போனது.. என்று உங்கள் மனைவியிடம் பேச உள்ளது. இது உங்கள் திருமண உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
உன் மீது இருந்த அன்பு, காதல் சுத்தமாக போய் விட்டது என்று உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாது. இது போன்ற வார்த்தைகள் அவர்களை அதிகம் காயப்படுத்தும்.
நான் வேறு யாரையாவது திருமணம் செய்து இருக்கலாம் என்று விளையாட்டாக கூட சொல்ல கூடாது. இது அவர்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தும். மேலும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை போய்விடும்.
உங்கள் மனைவியின் பெற்றோரை பற்றி குறை சொல்ல கூடாது. மேலும் அவர்களது குடும்பத்தை அடிக்கடி திட்டி பேசுவது குடும்பத்தில் மனக்கசப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எல்லா பிரச்சனைகளுக்கும் நீ தான் காரணம் என்று உங்கள் மனைவியை கை காட்ட கூடாது. இப்படி அடிக்கடி குறை கூறுவது உங்கள் மீது வெறுப்பை அதிகரிக்க செய்யும்.
நீங்கள் எதையாவது மறைக்கிறீர்கள் என்ற உணர்வை உங்கள் மனைவிக்கு ஏற்படுத்த கூடாது. திருமண உறவில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை கடைசி வரை தீர்க்க முடியாது.