இரவில் எப்படி படுத்தாலும் தூக்கம் வரவில்லையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்!

Thu, 14 Mar 2024-3:38 pm,

தற்போதைய காலக்கட்டத்தில் பலர், சரியான தூக்கமின்றி தவிப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இதற்கு பின்னால் மன அழுத்தம், டிஜிட்டல் சாதனங்களை உபயோகித்தல் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒரு மனிதனுக்கு சராசரியாக  7-8 மணி நேர தூக்கம் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இரவில் சில மணி நேரங்கள் கூட தூங்க முடியாமல் சிலர் தவிக்கின்றனர். 

யோகாசனங்கள் உடலில் மேஜிக் செய்யக்கூடிய பயிற்சிகள் ஆகும். சுவாச பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், உடலை வலுவாக்குதல் என யோகாசனத்தில் பல நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அதில் சில யோகாசனங்கள் இரவில் நல்ல தூக்கத்திற்கும் உதவும். அவை என்னென்ன தெரியுமா? 

ஸ்வானாசனா: இந்த ஆசனத்தை எப்படி செய்ய வேண்டும்?

>தரையில் நேராக படுத்துக்கொள்ளவும் >இரு பக்கங்களிலும் கைகளை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும் >உள்ளங்கை திறந்து இருக்க வேண்டும் >இரு கால்களும் கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டும், நெருக்கத்தில் இருக்க கூடாது >அப்படியே சில நிமிடங்கள் கண்களை மூடி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். 

விபரீத காரணி: இந்த ஆசனத்தை எப்படி செய்ய வேண்டும்?

>முதன் முதலாக செய்பவராக இருந்தால் தலையணையை பயன்படுத்த வேண்டும் >தரையில் படுத்துக்கொள்ள வேண்டும் >உங்கள் கால்களை மெதுவாக 90 டிகிரி அகலத்திற்கு தலைக்கு மேல் உயர்த்தவும் >கைகளை உங்கள் பின்பக்கத்திற்கு பின்னால் கொண்டு வந்து கால்களை இன்னும் உயர்த்துங்கள் >உங்கள் உடலின் கீழ் பகுதி இப்போது தரையில் இருக்காது >உங்கள் பாதம் மேல் நோக்கி பார்க்க வேண்டும் >அப்படியே மூச்சை 2-3 நிமிடங்களுக்கு இழுத்து விடவும். 

மர்ஜாரியாசனா-எப்படி செய்ய வேண்டும்?

>தரையில் மண்டியிட்டு அமர்ந்து பின்பு கைகளை கொண்டு நான்கு கால் பிராணி போல நிற்க வேண்டும் >உங்கள் முதுகை நன்றாக மேல் உயர்த்தவும் >அப்படி செய்கையில் உங்கள் முகத்தை உள்ளிழுக்கவும் >பின்னர் முதுகை கீழ் பக்கமாக வளைக்க வேண்டும்.  >அப்போது உங்கள் முகம் மேல் நோக்கி நிமிர வேண்டும் >இப்படி செய்கையில் மூச்சை இழுத்து நிதானமாக விட வேண்டும்

உத்தனாசனம்-எப்படி செய்வது?

>நேராக நின்று, பின்பு முன் புறமாக குணிய வேண்டும் >முட்டியை வளைக்காமல் கைகளால் தரையை அல்லது கால் கட்டை விரலை தொட வேண்டும் >இதை இடைவேளை விட்டு விட்டு செய்யவும். 

பச்சிமோத்தாசனம்-எப்படி செய்ய வேண்டும்?

>கால்களை முன்புறமாக நீட்டி தரையில் அமரவும் >உங்கள் கைகளை முன் நீட்டி, கால் கட்டை விரலை தொடவும். இதை செய்கையில் முட்டியை மடக்க கூடாது >பின்னர், உங்கள் முதுகை நன்றாக வளைத்து உங்களின் இரு கால்களுக்கும் நடுவில் முகம் பதியும் படி குணிய வேண்டும் >இந்த நிலையில் சிறிது வினாடிகள் மூச்சை இழுத்து விட வேண்டும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link