எந்த நாட்டில் நாய்கள் தினசரி physiotherapy, உடற்பயிற்சி செய்கிறது தெரியுமா?

Mon, 08 Feb 2021-9:35 pm,

தாய்லாந்தில், விபத்துக்களில் காயமடைந்து ஊனமுற்ற 27 நாய்கள், நாட்டின் தலைநகரான பாங்காக்கின் தென்கிழக்கில் சோன்பூரி என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தங்குமிடத்தில் ஆரோக்கியமாக சூழ்நிலையில் பராமரிக்கப்படுகின்றன.

(Photograph:Reuters)

The Man That Rescues Dogs என்ற அறக்கட்டளையால் நடத்தப்படும் இந்த நாய்கள் பராமரிப்பு மையம் 2002 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒருவரால் சோன்பூரியில் அமைக்கப்பட்டது.

(Photograph:Reuters)

நாய்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அமைப்புக்கு கிடைக்கும் நன்கொடைகளில் 40 சதவிகித வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பராமரிப்பு மையங்களை நடத்துவது சிரமமாக இருக்கிறதாம்!

 (Photograph:Reuters)

600 க்கும் மேற்பட்ட நாய்களைப் பராமரிப்பதற்கும், தெருக்களில் வசிக்கும் 350 நாய்களுக்கு உணவளிப்பதற்கும் இந்த தங்குமிடம் நாள்தோறும் $1,300 க்கும் அதிகமாக செலவிடுகிறது.

(Photograph:Reuters)

ஊனமுற்ற மற்றும் காயமடைந்த நாய்களுக்கு பிசியோதெரபி அமர்வுகள் நடத்துவதற்கு தன்னார்வலர்கள் உதவுகிறார்கள், ஆனால் நிதி பற்றாக்குறையால் சில சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   (Photograph:Reuters)

2017 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் கிட்டத்தட்ட 800,000 பூனைகள் மற்றும் நாய்கள் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தன. 2027ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் இரண்டு மில்லியனாகவும், அடுத்த 50 ஆண்டுகளில் ஐந்து மில்லியனாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே, நாட்டின் நன்மைக்கும் இந்த தங்குமிடங்கள் ஒரு முக்கியமான விஷயமாக மாறியது.

(Photograph:Reuters)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link