444 நாட்கள் SBI (FD) திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா!
எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம் (SBI Amrit Vrishti scheme) இத்திட்டத்தில் நீங்கள் சேர விருப்பமுள்ளவர்களாக இருந்தால் இதைப்பற்றி முழுவதுமாக இங்கு தெரிந்துகொள்ளவும். அதன்பின்னரே நீங்கள் இதில் வைப்பு செலுத்த ஆரம்பிக்கலாம்.
ஒரு நிலையான வைப்புத்தொகை என்பது 444 நாட்களுக்கு நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டியுடன் சேர்த்துப் பெறும் FD முறையாகும். குறிப்பாக இத்திட்டம் மார்ச் 31, 2025 இந்த தேதியில் மட்டுமே கிடைக்கும்.
இந்த நிலையான வைப்புத்தொகைத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் ஆண்டுக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை இதில் பெறுவீர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்குச் சிறப்புச் சலுகையாகக் கூடுதலாக 50% ஏற்றி ஆண்டுக்கு 7.75 சதவீத வட்டி விகிதம் வரை பெறுவீர்கள்.
உலகத்தில் எந்த இடத்தில் வாழ் இந்தியர்கள் இருந்தாலும் இத்திட்டம் பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகையாக ரூ.1,000 செலுத்த வேண்டும். குறிப்பாக இந்த நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்வதற்கு எந்தவொரு உச்ச வரம்பும் அளிக்கவில்லை.
ரூ.5 லட்சம் வரையிலான இந்த நிலையான வைப்புத்தொகைக்கு நீங்கள் ஏதேனும் காரணத்தினால் முன்கூட்டியே திரும்பப் பெற முன்வந்தால் இதற்கான அபராதம் 0.50% விதிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகையான இதில் நீங்கள் ரூ.3 கோடிக்குக் குறைவான வைப்பு செய்திருந்து அதில் முன்கூட்டியே திரும்பப் பெற விரும்பினால் இதற்கான வட்டிப்பிடிப்பு 1% விதிக்கப்படும். எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களாக இருப்பவர்களுக்கு இத்திட்டத்தில் எந்தவொரு அபராதமும் விதிக்கப்படவில்லை.
எஸ்பிஐ ரூ.5 லட்சம் நிலையான வைப்பு முதலீட்டில் ரூ.5,00,000 முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தில் ரூ.49,648 வட்டி மட்டுமே பெறுவீர்கள். மேலும் இதில் முதிர்வுத் தொகையாக ரூ.5,49,648 வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூ.5,00,000 நிலையான வைப்பு முதலீடு செய்யும் பொது குடிமக்களுக்கு 7.25% வட்டி விகிதத்தில் ரூ.46,330 வட்டி மட்டுமே பெறுவீர்கள். மேலும் முதிர்வுத் தொகையாக ரூ.5,46,330 வழங்கப்படும்.
எஸ்பிஐ நிலையான வைப்பு முதலீட்டில் ரூ.7 லட்சம் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தில் ரூ.69,507 வட்டி மட்டுமே பெறுவீர்கள். மேலும் முதிர்வுத் தொகையாக ரூ.7,69,507 வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூ.7,00,000 நிலையான வைப்பு முதலீடு செய்யும் பொது குடிமக்கள் 7.25% வட்டி விகிதத்தில் ரூ.64,863 வட்டி மட்டுமே பெறுவீர்கள். மேலும் முதிர்வுத் தொகையாக ரூ.7,64,863 வழங்கப்படும்.