PM Kisan Samman Nidhi எட்டாவது தவணையை பெறுவதற்கான பட்டியலில் பெயரை சரிபார்ப்பது எப்படி?
மத்திய அரசின் 75,000 கோடி ரூபாய் திட்டமானது, நாட்டில் நில உரிமையாளர்களின் அளவைப் பொருட்படுத்தாமல் 125 மில்லியன் விவசாயிகளை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கிசான் யோஜனாவை 2018 டிசம்பர் முதல் தேதியன்று தொடங்கினார்.
Step 1: பிரதமர் கிசான் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்: pmkisan.gov.in
Step 2: வலைத்தளத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள 'Farmers Corner' பிரிவில் உள்ள 'Beneficiary Status' விருப்பத்தை தெரிவு செய்யவும்.
Step 3: அங்கு சென்றதும், ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மூன்று எண்களின் உதவியுடன், நீங்கள் PK Kisan திட்டத்தின் உதவித் தொகையைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதையும் சரிபார்க்கலாம்.
பின்னர் இந்த வழிமுறைகளை பின்பற்றவும் Step 4: இந்த மூன்று எண்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தின் விவரங்களை நிரப்பவும்.
Step 5: இந்த எண்ணைக் கிளிக் செய்தால் எல்லா பரிமாற்றங்களின் தகவல்களும் கிடைக்கும்.
Step 6: பிரதமர் கிசான் திட்டத்தின் 8 வது தவணை தொடர்பான தகவல்களையும் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.