Tamil Nadu: அரசுப் பள்ளியின் வராண்டாவில் ரயில் வந்தது எப்படி?
இந்தப் பகுதியில் இருக்கும் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளே, இந்தப் பள்ளியின் மாணவர்கள். அரசுப் பள்ளியின் இந்த புதிய முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்தப் பள்ளியின் அனைத்து வராண்டாக்களையும் ரயில் பெட்டிகள் போல காட்சியளிப்பதால், அங்கு செல்லும்போது, ஒரு ரயிலுக்கு அருகில் வந்ததைப் போல உணர முடிகிறது.
இந்த பள்ளியில் பயிலும் பல பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களில் பலர் ரயிலில் பயணம் செய்யாத மாணவர்கள். இதை மனதில் கொண்டு மாணவர்கள் ரயிலில் பயணிக்காமலேயே, ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை வழங்குவதற்காக பள்ளி நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.
இங்கு பணிபுரியும் பள்ளி ஆசிரியர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: "இங்குள்ள மாணவர்கள் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வருகிறார்கள், ரயில்களில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்காதவர்கள். பள்ளிக்கு வரும் அவர்களுக்கு ரயிலின் சில பகுதிகளை அனுபவித்து கற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் பள்ளிக்கூட்த்தின் தாழ்வாரங்களில் சித்திரங்களை தீட்டினோம்."