கருவுற்று குட்டிகளை பெற்றெடுக்கும் ஒரே ஆண் விலங்கு எது தெரியுமா?
மனித இனமாக இருந்தாலும் சரி, விலங்கு இனமாக இருந்தாலும் சரி பெண் பாலினம் தான் அடுத்த சந்ததிகளை பெற்றெடுக்கின்றன. ஆனால் ஒரே ஒரு ஆணினம் கர்ப்பத்தை சுமக்கிறது.
Syngnathidae என்ற குடும்பத்தை சேர்ந்த ஆண் கடல் குதிரைகள் கர்ப்பமாகி குட்டிகளை பெற்றெடுக்கின்றன. உலகில் குட்டிகளை பெற்றெடுக்கும் ஒரே ஆண் இனமாக இவை உள்ளன.
கடல் குதிரைகளில் இந்த செயல்முறை ஆணின் வாலின் முற்பகுதியில் அமைந்துள்ள அடைகாக்கும் பை எனப்படும் ஒரு உறுப்பின் மூலம் நிகழ்கிறது.
இந்த பை கருப்பையை போலவே செயல்படுகிறது. ஆக்சிஜன் ஊட்டச்சத்து ஆகியவற்றை வழங்கும் ஒரு நஞ்சுக்கொடி போன்ற அமைப்பையும் இந்த உறுப்பு கொண்டுள்ளது.
என்னதான் அடைகாக்கும் பை இருந்தாலும், கர்ப்பம் தரித்தாலும் ஆண் கடல் குதிரைகள் இன்னும் உயிரியல் ரீதியாக ஆணாகவே கருதப்படுகின்றன.
இனச்சேர்க்கையின் போது பெண் கடல் குதிரைகள் தன் முட்டைகளை ஒரு கருமுட்டை மூலம் ஆணின் அடைகாக்கும் பைக்குள் வைக்கின்றன. அதன் பின்னர் ஆண் கடல் குதிரைகள் முட்டைகளை அந்த பைக்குள் கருவுற செய்கின்றன. அங்கு அவை சுமார் 24 நாட்கள் தங்கி வளர்கின்றன.