RTGS சனிக்கிழமை முதல் இல்லை என்பது தெரியுமா? ஏன்? வேறு வழி இருக்கிறதா?
"RTGS-ல் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கலுக்கு தீர்வு காணவும், RTGS அமைப்பின் பேரழிவு மீட்பு நேரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த பணிகளைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.” என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில்,குறிப்பிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது கட்டண செயல்முறைகளை முன்னரே திட்டமிட இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
நிதிப் பரிமாற்றத்திற்கு தேசிய மின்னணு நிதி பரிமாற்ற சேவை நெஃப்ட்டை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
RTGS க்கும் NEFT க்கும் உள்ள வித்தியாசம் என்ன?
RTGS மூலம் பெரிய தொகைகளை அனுப்பலாம். ரூ .2 லட்சத்துக்கு மேலான பணத்தை RTGS வழியாக அனுப்பலாம்.