Sharia Law: ஷரியா சட்டத்தை பின்பற்றும் நாடுகளின் தண்டனைகள் இவை!

Tue, 24 Aug 2021-8:41 pm,

ஷரியா என்பது அனைத்து முஸ்லிம்களும் நோன்பு, தானம் என்ற மத பழக்கங்கள் உட்பட எப்படி வாழ வேண்டும் என்பதை குறிக்கும் விதிமுறையாகும். 

இருப்பினும், இது எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பழமைவாத மற்றும் தாராளவாத முஸ்லீம்களுக்கு இடையிலான சர்ச்சைகள் எப்போதும் தொடர்கின்றன.  

அரபு மொழியில் ஆங்கிலத்தில் 'எல்லைகள்' என மொழிபெயர்க்கப்பட்ட ஹுதுத் (Hudud), விபச்சாரம், கற்பழிப்பு, ஓரினச்சேர்க்கை, திருட்டு மற்றும் கொலை போன்ற பாவங்களைச் செய்யும் மக்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும். இந்த கடுமையான தண்டனைகள் அரிதாகவே நிறைவேற்றப்பட்டாலும், சில நாடுகள் தீவிர ஷரியா சட்டத்தை தற்போதும் கடுமையாக பின்பற்றுகின்றன.

(புகைப்படம்: AFP)

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதிலிருந்து, இந்த குழு விரைவில் ஷரியா சட்டத்தை (Sharia law) அமல்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது. தலிபான்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஷரியா சட்டம் மிகவும் தீவிரமாக ஏன் மிருகத்தனமான செயல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அந்த விதிமுறைகளில் சில தளர்வுகள் அனுமதிக்கப்படலாம் என்று தெரிகிறது. பெண்கள் வேலை மற்றும் கல்விக்காக வெளியே செல்ல அனுமதிப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.   (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

சவுதி அரேபியா நாட்டு சட்டங்கள் அனைத்தும் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹுதுத் (Hudud) சவுதி பொதுவான தண்டனையாகும்.

சவுதியின் சட்டங்களின்படி, 'ஓரினச்சேர்க்கை செயல்கள்' மரணதண்டனை விதிக்கப்படக்கூடியவை. ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 'குற்றவாளிகள்' கசையடியை தண்டனையாகப் பெறுவார்கள் மற்றும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

பொதுவாக, வெள்ளிக்கிழமைகளில், நண்பகல் தொழுகைக்கு முன், வாளால் தலையை வெட்டுதல் மற்றும் உறுப்பு துண்டிக்கப்படுவது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படுவது சவுதியில் வழக்கம்.  

(புகைப்படம்: Pinterest)

2019 ல் ஷரியா சட்டத்தை அமல்படுத்திய முதல் தென்கிழக்கு ஆசிய நாடு புருனே. ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் தொழில் செய்பவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்துவது போன்ற சில தண்டனைகள் பின்பற்றப்படாது என்று நாட்டின் சுல்தான் உறுதியளித்தார். இருப்பினும், ஷரியா சட்டம் அமல்படுத்தப்பட்டதால், புருனேவில் உள்ள LGBTQ மக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.   (புகைப்படம்: AFP)

ஈரான் ஷாரி சட்டத்தைப் (Shari Law) பின்பற்றும்போது, நீதிபதிகள் சூழ்நிலைகளின் அடிப்படையில் சான்றுகளை எடைபோட அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுவாக ஈரானில் சிறை தண்டனையே பெரிதும் வழங்கப்படுகின்றன. இது வழக்கமான ஷரியத் சட்டத்தைப் போல கடுமையானது இல்லை. இருப்பினும், "கசையடி, உறுப்புகளை வெட்டுதல், கண் பார்வையை பறிப்பது உள்ளிட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளின் தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக" ஈரானை சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) விமர்சித்துள்ளது.

(புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link