உங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியம் பற்றி தெரியுமா?...
எல்லா தெய்வ திருவுருகசிலைகளிலும் கையில் ஆயுதங்களோ அல்லது ஏதாவது முத்திரையோ இருக்கும்.ஆனால், ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.அவர் வலது கையை கீழ் நோக்கி வெறுமையாக வைத்திருப்பார்.இதன் தத்துவம் வாழ்வில் எதுவும் நிலையற்றது என்பதை குறிக்கும்.
ஏழுமலையான் சிலை "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம்.
திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை.
எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும்.ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.
எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.