Eggplant: கத்திரிக்காய் நன்மைகளை மட்டுமல்ல, தீமைகளையும் செய்கிறது தெரியுமா?
நச்சுத்தன்மையுள்ள சோலனைன் உள்ளிட்ட ஆல்கலாய்டுகள் உள்ள நைட்ஷேட் குடும்பத்தின் ஒரு பகுதி கத்திரிக்காய் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் . இந்த தாவரங்களின் இலைகள் அல்லது கிழங்குகளை சாப்பிடுவதால் தொண்டையில் எரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. ஒவ்வாமை உள்ளவர்களை கத்தரிக்காய் சாப்பிட வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் இதுதான்.
சருமத்தை மென்மையாக்கும் கத்தரிக்காய், நீர்ச்சத்து கொண்டது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
கத்திரிக்காயில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நினைவுத் திறனை அதிகரிக்கிறது. மனதும் உடலுடன் ஓன்றுடன் மற்றொன்று இணக்கமாக வேலை செய்ய உதவும் சத்து இது...
கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து, செரிமானம் அதிகரிக்கவும், உடல் பருமன் குறையவும் உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து முக்தி கொடுக்கிறது கத்திரிக்காய்.
புற்றுநோய் வராமல் காக்கும் கத்தரிக்காயின் சிறப்பம்சம் தக்காளிக்கு ஈடானது, தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி தாது உப்புகள் கத்தரிக்காயில் நிறைந்துள்ளன.