தமிழ்நாட்டைச் சேர்ந்த வங்கிகளைப் பற்றித் தெரியுமா? @Banks
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஆகும். சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்தியிஅன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவகர் திரு. முத்தையா சிதம்பரம் செட்டியார். 1937 ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் காரைக்குடி, மதராஸ், ரங்கூன் ஆகிய மூன்று இடங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளைத் துவங்கினார். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் ஐ.ஓ.பி வங்கியின் கிளைகள் அமைக்கப்பட்டன. முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் வெளிநாடுகளுக்குச் சென்று வணிகத்தில் உச்சத்தைத் தொட்ட நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது ஐ.ஓ.பி. இந்தியாவுக்கு வெளியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அதிகமான கிளைகள் இருந்தன.
தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் முக்கியமான வங்கிகளில் ஒன்று கரூர் வைஸ்யா வங்கி. கொரோனா பாதிப்பு நிறைந்த இந்தக் கொரோனா காலகட்டத்தில் பல வங்கிகளும் தொழிலில் திணறி வரும் நிலையில், கரூர் வைஸ்யா வங்கி மட்டும் லாபத்தில் சுமார் 81 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டி யூனியன் வங்கி இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார் துறை வங்கி ஆகும். கும்பகோணம் வங்கி என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி 1904 அக்டோபர் 31 அன்று தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி, தற்போது இந்தியா முழுவதும் கணிணிமயமாக்கப்பட்ட 426 கிளைகளுடன் செயற்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited) இந்தியாவின் ஒரு பழமையான தனியார் வங்கியாகும். தூத்துக்குடி நகரை தலைமையகமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, நாடார் மகாஜன உறுப்பினர்களால் 1921 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த வங்கி இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913 ன் கீழ் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி நாடார் வங்கி (Nadar Bank Limited) எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு தற்போது இந்தியா முழுவதும் 267 கிளைகள் உள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமையகம் கரூரில் அமைந்துள்ளது. கரூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள வணிகர்களுக்கும் உழவர்களுக்கும் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்காக, வி. எஸ். என். ராமலிங்க செட்டியார் தலைமையில் கரூரின் ஏழு தொழிலதிபர்கள் ஒன்றாக இணைந்து 1926 நவம்பர் 3ஆம் தேதியன்று கரூரின் ஏழு தொழிலதிபர்கள் வங்கியை தோற்றுவித்தனர்.
எக்விடாஸ் சிறு நிதியுதவி வங்கி அல்லது எக்விடாஸ் வங்கி (Equitas Small Finance Bank) இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி. 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் சென்னையில் மூன்று கிளைகளுடன் Equitas வங்கி, தனது வணிக நடவடிக்கைகளை தொடங்கியது இந்த தனியார் வங்கியின் மேலாண்மை இயக்குநராகவும், தலைமை நிர்வாகியாகவும் பி. என். வாசுதேவன் செயல்படுகிறார்.