Yahoo: 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 20 இந்தியர்கள் யார் தெரியுமா?

Mon, 07 Dec 2020-8:56 pm,

பாலிவுட்டின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பாலிவுட்டையே அதிர வைத்தது. பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டன. திரையுலகில் வாரிசுகளின் ஆதிக்கம், பின்னணியில்லாமல் வருபவர்கள் ஒடுக்கப்படுவது, போதை மருந்து என சுஷாந்தின் மரணம் தொடர்பாக பல விவாதங்கள் தொடர்ந்தன.அவர் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. பாலிவுட்டின் பல பிரபலங்கள் விசாரணை செய்யப்பட்டனர். எனவே பல மாதங்கள் வரை சுஷாந்த் சிங் ராஜ்புத் தேடலில் ஆதிக்கத்தை செலுத்தினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி லாக்டவுன் அறிவித்தபோது, மக்கள் அவரை அதிகம் தேடினர். இதன் பின்னர், லாக்டவுன் காலம் முழுவதிலும் பிரதமர் மோடி யாகூ தேடலில் ஆதிக்கம் செலுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்

பாலிவுட்டின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக பல விஷயங்கள் அதிகம் தேடப்பட்டன. அதில் அவரது தோழி Rhea Chakraborty காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட போது அதிகம் தேடப்பட்டவர்களின் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

 

அதிகம் தேடப்பட்ட தலைவர்களில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நான்காவது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது, கட்சித் தொண்டர்கள் ராகுல் காந்தியை மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர், அந்த சமயத்தில் அவர் செய்திகளில் அதிக அளவில் இடம்பெற்றார்.  

இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் CAA க்கு எதிரான போராட்டத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். இதற்குப் பிறகு, அமித் ஷா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டபோது, மக்கள் அவரைப் பற்றி இணைய தளத்தில் அதிகம் தேடினார்கள். ஐந்தாவது இடம் உள்துறை அமைச்சருக்கு...

செப்டம்பர் மாதம் கங்கனா ரனவுத் மற்றும் சிவசேனா கட்சிக்கு இடையில் ஏற்பட்ட சர்ச்சையின் போது உத்தவ் தாக்கரே அதிகம் தேடப்பட்டார்.உத்தவ் தாக்கரே தேடலில் ஆறாவது இடம் பிடித்தார்

அதிகம் தேடப்பட்ட தலைவர்களில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஏழாவது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல்கள் நடைபெற்றன, இந்த நேரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் அதிக அளவில் தேடப்பட்டார்.

லாக்டவுனின் போது, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மற்றும் மத்திய அரசுக்கு இடையே நிறைய சச்சரவுகள் ஏற்பட்டன. மத்திய அரசின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய அவர், மாநிலங்களில் லாக்டவுன் செய்வது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே தீர்மானிக்க முடியாது என்று கூறினார். தேடலில் எட்டாவது இடம் பிடித்தார் மமதா பேனர்ஜி

 

நடிகர் அமிதாப் பச்சன் தேடலில் 9வது இடம்

செப்டம்பர் மாதம் கங்கனா ரனவுத் மற்றும் சிவசேனா கட்சிக்கு இடையில் ஏற்பட்ட சர்ச்சையின் போது அவர் அதிகம் தேடப்பட்டார். கங்கனா ரனவுத் மும்பையை PoK உடன் ஒப்பிட்டார், அதன் பிறகு சிவசேனா கங்கனாவுக்கு எதிராக தாக்குதல்களை தொடர்ந்தது.

மகேந்திர சிங் தோனி 11வது இடம்

நடிகை தீபிகா படுகோனே 12வது இடம்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31 அன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சிகிச்சைப் பெற்று வந்தார். பிறகு அவர் இயற்கை எய்தினார். அந்த சமயத்தில் பிரணாப் முகர்ஜி பற்றிய தேடல்கள் அதிகரித்தன.

சன்னி லியோன் 14வது இடம்

நடிகை பிரியங்கா சோப்ரா 15வது இடம்

கேத்ரீனா கைஃப் 16வது இடம்

நிர்மலா சீதாராமன் - லாக்டவுன் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க ஒரு பொருளாதார தொகுப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த நேரத்தில், மக்கள் அவர்களை நிறைய தேடினார்கள்.

 

காங்கிரஸ் கட்சியில் தலைமை குறித்த சர்ச்சையின் மத்தியில், இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராக தற்போதைக்கு தொடருவார் என்று முடிவு செய்யப்பட்டது.

 

இந்திய அணியின் கேப்டன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிக அளவில் தேடப்பட்டார். மனைவி அனுஷ்கா, திருமணம், குழந்தை, தொழில் என பலவிதங்களிலும் கோலி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அவர் 19வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸை விட்டு வெளியேறி இந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்தார், அதன் பிறகு அவர் மக்களின் தேடலில் அதிக அளவு இடம் பிடித்தார். ஜோதிராதித்ய சிந்தியா 20வது இடம்...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link