EVS பாடம் எதற்காகக் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் தெரியுமா!
எதிர்கால வாழ்க்கைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்: மாணவர்களுக்கு வாழ்க்கையின் நிலையான நடைமுறைகளின் அவசியத்தைப் பற்றி அவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
நிலையான வாழ்வை ஊக்குவிக்கிறது: ஆற்றலைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி EVS பாடத்தின் கீழ் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றன.
உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்த்தல்: மாணவர்கள் உணர்ச்சி மற்றும் சமூக திறன்களை வளர்க்க EVS பாடம் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மாணவர்களிடையே உருவாக்குகிறது.
பட்டாம்பூச்சி வாழ்க்கை முறை: ஒரு பட்டாம்பூச்சி வாழ்க்கையில் வெவ்வேறு நிலைகளைச் சித்தரிக்கும் தொடர்ச்சியான படங்கள் உள்ளடக்கியிருக்கிறது. இது குழந்தைகளுக்குப் படங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளும் தன்மையை ஏற்படுத்துகிறது. பட்டாம்பூச்சியின் சுழற்சி முறையை அறிய உதவுகிறது.
தாவரத்தின் பாகங்கள்: எதற்காக தண்டுகள், வேர்கள், இலைகள், பூக்கள் மற்றும் பழங்கள் உட்படத் தாவரத்தின் பாகங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தரக் காரணம், அவர்களுக்கு இதன் பயன்கள் மற்றும் பலன்கள் பற்றி அறிய உதவுகிறது.
விதை வளர்த்தல்: இந்த பாடத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதைப் பற்றிக் கற்றுக் கொடுக்க காரணம், அவர்களுக்கு இந்த விதைகள் பற்றியும் அதன் வளர்ச்சி குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக கற்றுக் கொடுக்கப்படுகிறது.
முக்கியத்துவம்: இந்தப் பாடம் குழந்தைகளுக்கு பல்வேறு நோக்கத்திட்டங்களை மேம்படுத்துகிறது. அறிவியல் சார்ந்த அறிவுகளை வளர்க்க உதவுகிறது.
விலங்குகள்: பொதுவாகக் குழந்தைகளுக்கு விலங்கினங்கள் பற்றி ஏதும் தெரியாது. அவர்கள் கல்வியின் மூலமாகத்தான் விலங்குகளின் வாழ்வாதாரங்கள், உணவுகள் மற்றும் அவற்றின் தன்மைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். எனவே அவர்களுக்கு இதுவே சிறந்த படியாகும்.