இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?

Tue, 04 Jun 2024-9:43 pm,

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 இன்று வெளியாகிவிட்டது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சி ஆதரவுடன் மட்டுமே எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியமைக்க முடியும்.

இப்போதைய சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கிறது.

பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணிக்கு திரும்பினால், இவர்களும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், மத்தியில் ஆட்சியமைக்க போவது யார்? என்பதற்கான அரசியல் சித்து விளையாட்டுகள் நாளை முதல் தொடங்க இருக்கிறது.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு, அக்கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தெரிய வரும்.

 

2014, 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி இவ்வளவு பலமாக இருக்கவில்லை. ஆனால் இம்முறை பாஜக பயப்படும் அளவுக்கான இடங்களை வென்றிருக்கிறது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு தான்.

ஆம், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி 2022 செப்டம்பர் மாதம் தன்னுடைய ஒற்றுமை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தான் தொடங்கினார்.

அவரின் இந்த பயணம் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்றது. அதன் பலன் இந்த தேர்தலில் காங்கிரஸ் கண்கூடாக பார்த்துவிட்டது. 100 தொகுதிகளை  வென்று இரண்டாவது பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸூக்கு தமிழ்நாடு தான் இப்போதும் கை கொடுத்திருக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link