முகேஷ் அம்பானியை ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கும் நபர் யார் தெரியுமா?

Wed, 23 Dec 2020-5:11 pm,

1998 இல் தொடங்கிய போட்டி: 1998 ஆம் ஆண்டில், செர்ஜி பிரின்  (Sergy Brin), தனது நண்பர் லாரி பேஜ் (Larry Page) உடன் இணைந்து கூகுளை ஒரு தேடுபொறியாக (search engine) அறிமுகப்படுத்தினார். அப்போது, இரு நண்பர்களும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) ஒன்றாகப் படித்தனர். தற்போது, அவர் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் (Alphabet Inc) நிறுவனத்திலும் உள்ளார்.

சொத்தின் நிகர மதிப்பு: ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, செர்ஜி பிரின்  (Sergy Brin) உடைய சொத்துக்களின் மதிப்பு 79.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதன்படி, அவர் உலகபணக்காரர்களின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.  அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Amazon founder Jeff Bezos) முதல் இடத்தில் உள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, உலகத்தின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி, கடந்த சில நாட்களாக முதல் 10 தரவரிசையில் இருந்து வெளியே வந்துவிட்டார். சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட பட்டியலின்படி முகேஷ் அம்பானி 74 பில்லியன் டாலர்களுடன் 11 வது இடத்தில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் அம்பானியின் செல்வம் அதிகரித்ததால், தரவரிசையில் அவர் முன்னேறினார். இதன் காரணமாக, தரவரிசையில் அம்பானி ஒன்பதாவது இடத்தை அடைந்தார்.  

இந்த நபர் 10 வது இடத்தில் உள்ளார்: லாரி எலிசன் (Larry Ellison) தற்போது 78 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 10 வது இடத்தில் உள்ளார். லாரி எலிசன் உலகின் மிகப்பெரிய வணிக மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) நிறுவனர் ஆவார். 2014 இல், ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அவர், தற்போது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார்.

தற்போது, முகேஷ் அம்பானியின் ஜியோ இயங்குதளத்தில் (Jio platform) கூகுள் முதலீடு செய்துள்ளது. இந்தியாவில் 2 ஜி சேவைகளை இலவசமாக வழங்குவதில்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கூகுள் (search engine Google) இரண்டும் இணைந்து செயல்படும். இதற்காக கூகுள் RIL நிறுவனத்தின் தொலைதொடர்பு பிரிவான ஜியோவில் 33737 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக, கூகுள் ஜியோ இயங்குதளத்தில் 7.7 சதவீத பங்குகளைப் பெற்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link