ஏஐ செய்யப்போகும் உலகமகா பிரச்சனைகள்..!

Sat, 17 Feb 2024-2:01 pm,

ஏற்கனவே இணைய உலகில் பல்வேறு பிரச்சனைகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஏஐ உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறது தொழில்நுட்ப உலகம். இதுகுறித்து பேசிய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஏஐ நிச்சயம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தப்போகிறது என எச்சரித்துள்ளனர்.

 

சைபர் குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2024-ல் ஏஐ தொழில்நுட்பத்தால் பெரிய ஆபத்து ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. 

பொருளாதார ரீதியான சரிவு, போர் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின் வரிசையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பரப்பப்படும் தவறான தகவல்களால் பெரிய பாதிப்பை உலகம் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

இதுவரை நாம் எதிர்கொள்ளாத வகையில் இந்த ஆண்டு தொழில்நுட்பத்தால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். அடுத்த சகாப்தங்களில் உலக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் போன்றவற்றால் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

 

சைபர் குற்றங்களை சிறப்பாக பராமரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் நிறுவனங்கள் சைபர் குற்றங்களுக்கு உள்ளாகி பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனால் உலக அளவில் இணைய சமத்துவமிண்மை அதிகரித்துள்ளதால், அதை முறையாக நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் WEF அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக எஐ மற்றும் ஜெனரேட்டிவ் AI போன்ற தொழில்நுட்பங்கள் பெரும் அச்சுறுத்தல்களாக மாறும். 

 

இதன் வளர்ச்சியால் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேர்தல் செயல்முறைகளில் கூட நேர்மை இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. 

 

அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதாரம் காரணமாக, டிஜிட்டல் சாம்ராஜ்யம் பெரும் அளவில் உயர்ந்து வருவதால், இது உலகிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

 

எனவே 2024 ஆம் ஆண்டில் AI துறையின் வளர்ச்சியால், உலகில் பெரும் ஆபத்துகளும், தாக்கங்களும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link