இரவு தூக்கம் முதல் கண் பார்வை வரை... திராட்சை ஜூஸ் குடித்தால் அனைத்தும் சீராகும்!
திராட்சை பழத்தை வெறுமையாக சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். இருப்பினும், பழமாக சாப்பிடுவதை விடவும் இந்த கோடை காலத்தில் நீங்கள் திராட்சை பழத்தை பாலுடனோ அல்லது தண்ணீருடனோ கலந்து இனிப்புகள் ஏதும் இன்றி ஜூஸாக குடிக்கலாம்.
கண் பார்வை: திராட்சை ஜூஸை தொடர்ந்து குடித்து வரும்பட்சத்தில் கண்சார்ந்த பிரச்னைகள் வராது.
தலைமுடி வளர்ச்சி: பலருக்கும் தலைமுடி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவர்கள் திராட்சை ஜூஸை வாடிக்கையாக குடித்தால் பலன் கிடைக்கும்.
உடல் எடை குறைப்பு: உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் நொதி பொருள்கள் திராட்சையில் உள்ளன. எனவே, திராட்சை பழ ஜூஸை உங்கள் உணவில் அடிக்கடி எடுத்துக்கொண்டால் உடல் எடை குறைப்பு பயணத்தில் நல்ல பலனை தரும்.
பெண்களின் கவனத்திற்கு: குறிப்பிட்ட வயதிற்கு பின் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறையும் என கூறப்படுகிறது, இப்பிரச்னைகள் ஆண்களுக்கும் வரும் என்றாலும் பெண்கள் அதிகமானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அதனை திராட்சை பழம் தடுக்கும்.
இரவில் நல்ல தூக்கம்: தூக்கம் வராமல் இரவில் ஆந்தை போல் முழித்திருப்பவராக நீங்கள், திராட்சை ஜூஸை அடிக்கடி குடிக்கும்பட்சத்தில் உங்களின் தூக்கம் சீராகும்.
பொறுப்பு துறப்பு: திராட்சை பழ ஜூஸை குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இந்தச் செய்தியின் மூலம் தெரிந்திருப்பீர்கள். இது உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. திராட்சை பழ ஜூஸை எந்தெந்த அளவில் எப்படி குடிக்கலாம் என்பது குறித்து கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.