எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீர்: எடை இழப்பில் மேஜிக் நடக்கும்
தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழ நீரை (Lemon Water) குடித்தால் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் அதற்கான சரியான வழியை பின்பற்ற வேண்டும்.
எலுமிச்சை நீரை குடிக்கவும் சரியான வழியும் நேரமும் உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதை உட்கொள்ளும்போது உடல் எடை (Weight Loss) குறைவதோடு நம் உடலில் உள்ள அழுக்குகளும் வெளியேறுகின்றன. மேலும் இதன் காரணமாக உடல் உறுப்புகளும் சரியாக செயல்படுகின்றன. தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிப்பதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
இது நமது சருமம், கூந்தல் உட்பல உடலின் பல பாகங்களுக்கு நன்மை பயக்கும். எலுமிச்சம்பழம் கலந்த வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வெளியேறும்.
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீரைக் (Warm Water) குடிப்பது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறை மேம்படுகிறது. இது தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் எலுமிச்சம்பழம் கலந்த வெந்நீரைக் குடித்து வந்தால், உடல் முழுவதிலும் உள்ள நச்சுகள் நீங்கும்.
தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் நமது உடல் பருமனை வேகமாக அதிகரிக்கின்றன. இதன் காரணமாக நாம் கடுமையான நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. உடல் பருமனால் நாளடைவில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற கடுமையான நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.