உடலை வலுவாக்கும் சப்போட்டா பழ ஜூஸ்... கர்ப்பகால தாய்மார்களுக்கு ரொம்ப நல்லது!
)
Sapota Fruit Juice Health Benefits: சப்போட்டா பழத்தை ஜூஸாக போட்டுக்குடித்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
)
தாய்மார்கள் தாராளமாக சாப்பிடலாம்: சப்போட்டாவில் கார்போஹைட்ரேட் மற்றும் அத்திவாசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கர்ப்ப காலத்தில் பெண்கள் நிச்சயம் இதனை உண்ணலாம். அந்த வகையில் சப்போட்டா ஜூஸ் உடலுக்கு பலம் அளித்து, வாந்தி, தலைச்சுற்றல் போன்றவற்றையும் தடுக்கும்.
)
சருமத்திற்கும் நல்லது: மற்ற ஜூஸ்களை போலவே சப்போட்டா ஜூஸ் குடித்தாலும் சருமம் பளப்பளக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: சப்போட்டாவில் வைட்டமிண் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எலும்புகளை வலுவாக்கும்: சப்போட்டாவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. எனவே, சப்போட்டாவை ஜூஸாக தினமும் குடித்தால் எலும்புகள் வலுபெறும்.
கேன்சரை அண்டவிடாது: சப்போட்டாவில் அதிகளவு ஆண்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கேன்சர் வரும் அபாயத்தை மிகவும் குறைக்கிறது. எனவே, சப்போட்டா ஜூஸை குடிப்பதும் நன்மை பயக்கும்
பொறுப்பு துறப்பு: இங்கே சப்போட்டா பழத்தின் ஜூஸை குடிப்பதன் மூலம் வரும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.