Republic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்

Tue, 26 Jan 2021-7:56 pm,
Cultural event in Rajpath

72 ஆவது இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் நமது தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி மிகவும் வண்ணமயமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது

Tamil Culture

தில்லித் தமிழ்க் கல்விக் கழக மாணாக்கர்களின் பங்களிப்பு தமிழ் கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருந்தது

 

Coronavirus

இந்த கொரோனா காலத்திலும் அற்புதமாக  பயிற்சி எடுத்துக் கொண்டு மாணாக்கர்கள் நிகழ்த்திக் காட்டிய கலைநிகழ்ச்சியானது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

தில்லி தமிழ் கல்விக் கழக மாணாக்கர்கள், தில்லியின் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார்கள்.   

கிராமிய நடனங்களான சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், காவடி ஆட்டம், மயிலாட்டம் என மாணாக்கர்கள் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்

தலைநகர் தில்லியில் தில்லி தமிழ்க் கல்விக் கழகம் 97 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மாணவர்களின் அற்புதமான திறமை வெளிப்பட்டது

உலகமே, சர்வதேச அளவிலான பெரும் தொற்று நோயான கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கையில், தில்லியின் தமிழ் கல்வி கழகத்தை சேர்ந்த இந்த மாணவர்கள், கடின உழைப்பு மற்றும் அயராத அர்ப்பணிப்புடன் பயிற்சிகளை செய்து, தங்களை நிரூபித்துக் காட்டியுள்ளனர்

தில்லி தமிழ் கல்விக் கழக (DTEA) மாணாக்கர்கள் 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link