வக்ரமடையும் புதன்... இந்த 5 ராசிகளின் வாழ்க்கையில் திடீரென பிரச்சனைகள் தோன்றும்!
Mercury Retrograde 2023: கிரகங்களின் இளவரசர் புதன் ஆகஸ்ட் 24, 2023 அன்று, கிரகங்களின் இளவரசர் புதன் சிம்மத்தில் வக்ர நிலையை அடைகிறார். இதன் தாக்கம் எல்லா ராசிகளிலும் இருக்கும் என்றாலும் குறிப்பிட்ட 5 ராசிகள் இதனால் மிகவும் பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.
துலாம் ராசிக்கு புதன் வக்ர நிலை பொருளாதார விஷயங்களில் மிகவும் சாதகமற்றதாக கருதப்படுகிறது. பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். உங்கள் குடும்பத்தில் சண்டை அதிகரிக்கலாம். மாணவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் தகராறு செய்யலாம். சிறிது நேரம் பொறுமையாக இருந்து கெட்ட காலங்களை கடந்து செல்வது நல்லது. இந்த நேரத்தில் பணத்தை எங்கும் முதலீடு செய்வது சரியாக இருக்காது. வீட்டில் வெள்ளை பூக்கள் கொண்ட செடிகளை நடவும்.
சிம்மத்தில் தான் புதன் வக்ரம் அடைந்துள்ளது. இந்நிலையில் அதன் சாதகமற்ற பலன் காரணமாக, உங்கள் செலவுகள் பெருமளவில் அதிகரிக்கும். ஒரே விஷயத்திற்கு மீண்டும் மீண்டும் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் நோய் காரணமாக, நிறையசெலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் எந்த முதலீடும் செய்து பணத்தை சேமிக்க வேண்டாம். நண்பர்களுடன் சில வகையான தகராறு காரணமாக, அவர்கள் உங்கள் வார்த்தைகளை தவறாகப் புரிந்துகொள்வார்கள். மீடியா அல்லது வங்கியுடன் தொடர்புடையவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம் மற்றும் திடீரென்று தொண்டை மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படலாம். உணவில் கவனம் செலுத்துங்கள். துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றுங்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு வக்ரம் அடைந்துள்ள புதன் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய சரிவு ஏற்படலாம். சில காரணங்களால் உங்கள் வீட்டுச் சூழலிலும் அலைச்சல் ஏற்படும். உங்கள் பெற்றோருடனான உறவில் பதற்றம் அதிகரிக்கலாம். உங்கள் வாகனம் திடீரென பழுதடையும் மற்றும் தேவையற்ற செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். நீங்கள் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இப்போதே ரத்து செய்யுங்கள். நேரம் சரியில்லை. அலுவலகத்தில் உங்கள் சொந்த வேலையில் கவனம் செலுத்தவும். சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்க்கவும். உங்கள் கேஜெட்களும் திடீரென செயலிழக்கக்கூடும். புதன் கிழமைதோறும் நிலவேம்பு கசாயம் சாப்பிட்டு தானம் செய்யுங்கள்.
எந்தவொரு தேர்வு அல்லது நேர்காணலுக்கும் தயாராகும் மேஷ ராசிக்காரர்கள் வக்ரம் அடைந்துள்ள புதனால் தோல்வியை சந்திக்க நேரிடும். உங்கள் தேர்வும் ரத்து செய்யப்படலாம். இதற்கிடையில் பெண்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் கணிசமாக அதிகரிக்கும். காதல் உறவுகளில் பிரச்சனைகள் வரலாம். பணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில், முடிவுகள் மோசமாக இருக்கலாம். புதன் கிழமைதோறும் பசுவிற்கு கீரையை உணவாக அளிக்கவும்.
புதனின் வக்ர நிலை தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கிடையே பிரச்னைகள் வரலாம். ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் தவறான புரிதல்கள் உங்கள் வணிகத்தை பாதிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களுடனான உங்கள் உறவு குறையலாம். காதல் வாழ்க்கையில் துணையுடன் சண்டை வரலாம். திருமணம் ஆனவர்களுக்கும் கசப்பான உறவுகள் இருக்கலாம். புதன் கிழமைதோறும் விநாயகருக்கு அருகம் புல்லை அர்ப்பணம் செய்யவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.