அஸ்தமனமாகும் சனி... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘4’ ராசிகள்!
ஜோதிடத்தில் சனி பகவான், கர்ம பலன்களை கொடுக்கும் கிரகமாக இருப்பதால், நீதி கடவுள் என்றும் அவர் அழைக்கப்படுகிறார். இந்நிலையில், பிப்ரவரி பதினொன்றாம் தேதி சனி அஸ்தமனம் ஆகியுள்ளார். அவர் மீண்டும் மார்ச் 26 ஆம் தேதி உதயமாவார். இதனால் எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசியினர் சனியின் அஸ்தமனத்தால், உடல் ரீதியாக பாதிப்பை உணர்வார்கள். ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் உங்கள் முயற்சி பலன் இல்லாமல் போகலாம். இதனால் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம்.
மிதுன ராசியினர், சனி அஸ்தமன காலகட்டத்தில், நிதி ரீதியாக பாதிப்பை சந்திக்கலாம். வருமானம் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. வீட்டிலும் சூழ்நிலை மிகவும் சுமுகமாக இருக்காது. வேலையில் கவனம் தேவை. இல்லை என்றால் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கன்னி ராசியினரை பொறுத்தவரை, சனி அஸ்தமனம் காரணமாக, வாழ்க்கையில் குழப்பங்களை சந்திக்க நேரிடும். முக்கியமான முடிவுகளை எடுக்காமல், சிறிது ஒத்தி போடுவது நல்லது. பணியிடத்தில், உங்கள் மீது அதிருப்தி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக செயல்படவும்.
தனுசு ராசிக்காரர்கள், வேலையில் தடங்கல்கள் தடைகளை சந்திக்க நேரிடலாம். சக ஊழியர்களால், மேலதிகாரியின் அதிருப்தியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருப்பது நல்லது. உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவும். இல்லையென்றால் பணம் நெருக்கடி ஏற்படலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.