வக்ர நிவர்த்தி அடையும் சனி... தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் தான்!
ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்களைக் கொண்டவை. சனி பகவான் கர்மாவிற்கு ஏற்ற பலனை கொடுப்பவர்.
நவகிரகங்களில் எந்த ஒரு கிரகத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சனிக்கு உண்டு. சனிபகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனி கிரகம் ஆகும்.
வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான், நவம்பர் 4, 2023 அன்று மதியம் 12:31 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
ரிஷபம்: சனியின் வக்ர நிவர்த்தியினால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி ஆசிகளைப் பொழிவார். உங்களுக்கு செல்வத்தை சம்பாதிக்கவும் குவிக்கவும் பொன்னான வாய்ப்பை வழங்கும். வேலை மற்ற்ம் தொழில் ரீதியாக நிறைய முன்னேற்றம் அடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் பதவியும் சமூகத்தில் கௌரவமும், மரியாதையும் உயரும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி மிகவும் சாதகமாக அமையும். சனி உங்கள் ராசியிலிருந்து ஏழாவது வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் ராசியிலிருந்து ஷஷராஜ் யோகம் உருவாகும். வேலையில் வணிகத்தில் வருமானம் பெருகி நிதி நிலை வலுவாக இருக்கும். இதனுடன், குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி ஏற்படும்.
மகரம்: சனியின் வக்ர நிவர்த்தி, மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக அமையப் போகிறது. இந்த நேரத்தில், நீங்கள் பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகளைப் பெறுவீர்கள், வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய லாபம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. சனியின் அருளால் வேலையில் வெற்றி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது