மேஷத்தில் புத ஆதித்ய யோகம்! சித்திரையில் சீரும் சிறப்பும் பெறும் ‘5’ ராசிகள்!

Thu, 13 Apr 2023-2:52 pm,

தமிழ் புத்தாண்டு பிறப்பன்று, சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். மேஷத்தில் ஏற்கனவே புதன் இருக்கும் நிலையில், இரு கிரகங்களும் இணைந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.  ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகமாகக் கருதப்படுகிறது. மே 14 வரை நீடிக்கும் புத்தாதித்ய யோகத்தின் சுப பலன்களால் 5 ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் முழுவதும் பல அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதோடு,  பண வரவு அதிகரித்து, பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். இந்த 5 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

புத ஆதித்ய யோகத்தினால் மேஷ ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவார்கள். இவர்கள் நிறைய சம்பாதிக்கலாம். அலுவலக பணியிலும், தொழில் ரீதியாகவும் எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். எல்லாவற்றிலும் வெற்றியைப் பெறுவார்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நல்ல லாபம் பெறுவார்கள். காதல் விவகாரங்களில் புத்தாதித்ய யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும்.

புத ஆதித்ய யோகத்தினால் மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பீர்கள், மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியை அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இது தவிர, நீங்கள் ஒரு புதிய தொழிலையும் தொடங்கலாம். அலுவலகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உங்களுக்கு முக்கியப் பங்கு வழங்கப்படலாம்.  புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பல வழிகளில் பணம் சம்பாதிப்பீர்கள். 

கடக ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய யோகத்தின் பலன் காரணமாக, தொழில் மற்றும் நிதி வளத்தில் நன்மைகள் கிடைக்கும். நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். நீண்ட காலமாக உங்கள் வேலையை மாற்ற முயற்சித்துக்கொண்டிருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் உழைப்பிற்கு பலன் இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் பணித் துறை விரிவடையும். நீங்கள் பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

புத்தாதித்ய யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணம் மற்றும் தொழில் ரீதியாக மிகவும் நன்மை பயக்கும். தொழிலில் பலன்களுடன் நிதி விஷயங்களிலும் வெற்றி பெறலாம். சமயப் பணிகளில் உங்கள் நாட்டம் அதிகரித்து கடவுள் நம்பிக்கை ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், உங்கள் துணையுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். குடும்பத்துடன் எங்காவது செல்ல திட்டம் தீட்டலாம், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இந்த நேரத்தில் உங்களுக்கு பணம் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்காது. உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

தனுசு ராசிக்காரர்கள் புதாதித்ய யோகத்தின் செல்வாக்கின் கீழ் தொழில் தொடர்பான விஷயங்களில் பல அற்புதமான வாய்ப்புகளைப் பெறலாம். உங்கள் அலுவலகத்தில் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கடனாக கொடுத்த பெரும் தொகையைத் திரும்பப் பெறுவதன் மூலம் உங்கள் நிதி நிலை மேம்படும். காதல் விவகாரங்களால் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவீர்கள், துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link