Corona காலத்தில் கோடிகளில் சம்பாதித்த பில்லியனர்கள்

Tue, 29 Dec 2020-4:52 pm,

ராஜேந்திர அகர்வால், பன்வாரிலால் பாவ்ரி மற்றும் கிர்தாரி லால் பாவ்ரி ஆகிய மூன்று சகோதரர்கள். 1986 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் மேக்லியோட்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் (Macleods pharmaceutical company) என்ற மருந்து நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கிறது. கொரோனா காலத்தில், இந்த மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து, நிறுவனத்தின் நிகர மதிப்பு 9,559 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியது.

சீனாவின் புதிய பில்லியனர்களில் மிக முக்கியமானவர் BioNtech-இன் இணை நிறுவனர் உர் சாஹின் (Ur Sahin) மற்றும் மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பன்செல். பயோனோடெக், பிஃபைசர் (Pfyzer) நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. ஃபைசர் மற்றும் மாடர்னா (Moderna) இரண்டும் தடுப்பூசி உருவாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளன.   ஃபைசருடனான கூட்டுக்குப் பிறகு, BioNtech-இன் பங்கு விலை 160% அதிகரித்துள்ளது. மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் புன்செல் 30,147 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளார்.

பிரேம்சந்த் கோதா (Premchand Godha) இந்திய மருந்து நிறுவனமான இப்கா லேப்ஸின் (Ipca Labs) தலைவராக உள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 10,000 கோடி ரூபாயும். உண்மையில், கொரோனா வைரஸ் காரணமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்துக்கான தேவை வேகமாக அதிகரித்தது. இந்த காரணத்திற்காக, நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு அதிரடியாக அதிகரித்தன.

மற்றொரு சீன நிறுவனமான ஷென்ஜென் காங்டாய் உயிரியல் தயாரிப்புகளில் 24 சதவீத பங்குகளைக் கொண்ட யுவான் லிப்பிங்-இன் (Yuan Liping) சொத்துக்களின் மதிப்பு கணிசமான அதிகரித்தது.   ஜூன் மாதம் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, Yuan Liping-இன் மொத்த சொத்து மதிப்பு 30,147 கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக, யுவான் கனடாவின் பணக்கார பெண்ணாகவும் ஆனார். 

சீனாவின் கான்டெக் மருத்துவ அமைப்புகளின் தலைவரான ஹு குன் (Hu Kun) இந்த ஆண்டு கோடீஸ்வரரானார். அவரது சொத்து மதிப்பு 28,677 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனம் மருத்துவமனை உபகரணங்களை தயாரிக்கிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link