காது வலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்
2 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி பூண்டை கடுகு எண்ணெயில் சூடாக்கி, ஆறிய பின் வடிகட்டவும். இதற்குப் பிறகு காதில் 2 முதல் 3 சொட்டு விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் வெங்காயச் சாற்றை லேசாக சூடாக்கி, ஆறிய பிறகு 2 முதல் 3 துளிகள் காதில் விட்டால் நிவாரணம் கிடைக்கும். இந்த முறையை ஒரு நாளைக்கு 3 முறை செய்யவும்.
துளசி இலைகளின் புதிய சாற்றை காதில் சில சொட்டுகள் விட்டு வந்தால் 1-2 நாட்களில் காதுவலி முற்றிலும் குணமாகும்.
வேப்ப இலையை சாறு எடுத்து காதில் 2 முதல் 3 துளிகள் விட்டால் காது வலி மற்றும் தொற்று நீங்கும்.
இஞ்சி சாறு எடுத்து காதில் 2 முதல் 3 துளிகள் விடவும். இது தவிர இஞ்சியை அரைத்து ஆலிவ் ஆயிலில் கலந்து வடிகட்டி 2-3 சொட்டு காதில் விடலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை