இந்த 6 உடற்பயிற்சி பண்ணால் போதும்! உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்கலாம்!
உடலில் தங்கியுள்ள கலோரிகளை எரிக்க இந்த Drop Squat பயிற்சி உதவுகிறது. இது நீங்கள் சாதாரணமாக செய்யும் ஸ்குவாட்ஸ் போல தான், ஆனால் எந்திரிக்கும்பொழுது ஜம்ப் செய்வது போல் செய்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.
High Knee எனும் இந்த கார்டியோ பயிற்சி உங்களுக்கு சிறந்த பலனை தரும். இதற்கு நேராக நின்றுகொண்டு உங்கள் முட்டியை இடுப்புவரை உயர்த்தி இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி குதிப்பது போன்று செய்யவேண்டும்.
உங்கள் கால்களை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் இந்த Lateral Bounds பயிற்சி உதவுகிறது. இதனை செய்ய முதலில் வலது காலில் பேலன்ஸ் செய்து நின்றுகொண்டு, பக்கவாட்டில் நேராக குதித்து இடது காலில் பேலன்ஸ் செய்து நிற்கவேண்டும். இப்படியே மாறி மாறி செய்யவேண்டும்.
Power Jack பயிற்சியின் மூலம் அதிக கலோரிகள் வெளியேற்றப்படுகிறது. இதனை செய்ய ஸ்குவாட்ஸ் பொசிஷனில் குதித்து குதித்து அமர வேண்டும்.
Bicycle Crunch தொப்பையை குறைக்க உதவுகிறது, தரையில் படுத்துக்கொண்டு 90 டிகிரி அளவில் உடலை வளைத்து வைத்து வலது காலின் முட்டி, இடது கையின் முட்டியிலும், இடது காலின் முட்டி வலது கையின் முட்டியிலும் படுமாறு மாற்றி மாற்றி செய்ய வேண்டும்.
இதய துடிப்பு சீராகி உங்கள் முழு உடலும் இந்த Mountain Climber பயிற்சியில் ஈடுபடுகிறது. பிளாங்க் செய்வது போன்ற பொசிஷனில் உடலை வைத்துக்கொண்டு, கைகளை நிலையாக வைத்துக்கொண்டு, மலையேற்றம் செய்வது போல கால்களை மட்டும் அசைக்க வேண்டும்.