‘இதை’ செய்தால் இனி முடி கொட்டவே கொட்டாது! என்ன தெரியுமா?
இரசாயனங்கள் தவிர்க்க:முடியை வலுவிழக்கச் செய்யும் இரசாயன கலர்கள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். மேலும் அதைப் பயன்படுத்தி வருபவர்களாக இருந்தால் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துங்கள்.
துரித உணவைத் தவிர்க்க: துரித உணவு தற்போது டிரெண்ட் ஆகிவிட்டது. நேரம் தவிர்த்து உடலுக்கு ஒத்து வராத உணவை வயிறு நிறையச் சாப்பிட்டு அதன்பின் முடிகொட்டியது என வருத்தப்பட கூடாது. இது அனைவரும் செய்துவரும் மிகப் பெரிய தவறாக இருக்கிறது. துரித உணவைத் தவிர்த்து இயற்கை உணவைச் சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவது குறைவும்.
மருத்துவரை அணுக: தொடர்ந்து முடி உதிர்தல் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்,தோல் மருத்துவரை தொடர்புகொண்டு சிகிச்சை பெற்றுச் சரிசெய்து மருத்துவர் அறிவுரைப்படி நடந்துகொள்ளவும்.
மன அழுத்தம்: மன அழுத்தத்தினால் முடி உதிர்வு ஏற்படும், பல வழிமுறைகள் இருந்தாலும் மன அழுத்தத்தை நாம்தான் சரிசெய்ய முடியும். அதற்கு மருந்து கிடையாது. மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர தியானம், யோகா அல்லது வழக்கமான உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சி செய்யவும்.
மசாஜ்:நம் உச்சந்தலையில் மசாஜ் செய்வது தலை முடிக்கு வலு அதிகரிக்க உதவும். இது நம் உடலின் இரத்த ஓட்டத்தைத் தூண்டும். மேலும் இரத்த ஓட்டம் சீராகும் .இதனால் முடி உதிர்வது குறையும். தலையில் எண்ணெய் பயன்படுத்துவது அதாவது தேங்காய் எண்ணெய்,ஆமணக்கு எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது குறையும். முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
முடி பராமரிப்பு:குறைவான வாசனைத் திரவிய ஷாம்புவை பயன்படுத்தவும். தேவையற்றதை தலைமுடியில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். அழகு சாதனங்கள் பயன்படுத்தினால் அதைப் பராமரிப்பதை தவறவிட்டால் முடி கொட்டத் தொடங்கிவிடும்.
நீர்ச்சத்து : நம்முடைய உச்சந்தலை மற்றும் முடியை எப்போதும் வறண்ட நிலையில் வைத்திருக்கக் கூடாது. உச்சந்தலை எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். முடியை வறண்டு விடுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கும்.இதனால் தண்ணீர் தினமும் குடித்துவந்தால் முடி உதிர்வதைத் தடுக்க முடியும்.
ஊட்டச்சத்து: வைட்டமின்B மற்றும் இரும்புச்சத்து உணவுப் பொருட்களான முட்டை,கீரைகள்,மீன்,பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நம் உடல் தலைமுடியை வலுவாக்க உதவும். மேலும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் உண்பதால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.