Weight Loss Tips: இந்த காலை உணவு உங்க உடல் எடையை வேகமா குறைக்குமாம்
பிரெட்டை முழுவதுமாகத் தவிர்ப்பது ஒரு சிறந்த தீர்வாகாது, ஏனெனில் இது எடை இழப்பு செயல்முறையை மெதுவாக்கும். காலை உணவில், முட்டை அல்லது காய்கறிகளுடன் இரண்டு பிரெட் துண்டுகளை சாப்பிடலாம். எடையைக் குறைக்கும் அந்த 4 வகையான பிரெட்களைப் பற்றி இன்று இங்கு காண்போம்.
இந்த வகை பிரெட்டைத் தயாரிக்க கோதுமை பயன்படுத்தப்படுகிறது. இது சாதாரண பிரெட்டை விட இது ஆரோக்கியமானது. முழு கோதுமை பிரெட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
ஓட்ஸ் ஆரோக்கியமான தானியமாகக் கருதப்படுகிறது, அதிலிருந்து பிரெட் தயாரிக்கப்பட்டால், பல ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம். ஓட்ஸ், முழு கோதுமை மாவு, ஈஸ்ட், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த பிரெட் தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து, மக்னீசியம், வைட்டமின் பி-1, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, இதன் காரணமாக எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
முழு தானிய பிரெட் பசியை குறைக்க ஒரு சிறந்த வழி. இதை சாப்பிடுவதால் இருதய நோய் அபாயம் குறைகிறது. இந்த வகை பிரெட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த வகை பிரெட் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த பிரெட்டை சாப்பிடுவதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி நாள்பட்ட நோய் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.