ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ‘இந்த’ 5 பழங்களை தோலுடன் உண்டால் டயபடீஸ்க்கு குட் பை சொல்லலாம்
நாள்பட்ட நோயான நீரிழிவு குணப்படுத்த முடியாதது என்று சொன்னாலும் கட்டுப்படுத்த முடியும். மருந்துகள் மற்றும் உணவுக்கட்டுபாடு நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமானவை. அவற்றின் உதவியுடன் அதிகரித்து வரும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவை ஒரே நேரத்தில் பராமரிக்க முடிந்தால் மட்டுமே நீரிழிவு நோய் கட்டுப்படும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் ஏராளமான பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்
நார்ச்சத்து உள்ள பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், சில பழங்களின் தோலில் இது போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் அந்த பழங்களை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? தோலுடன் உண்ணக்கூடிய பழங்கள், மற்றும் சர்க்கரையை மட்டுமல்ல, பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்தும் சிறப்பு வாயந்த பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
எல்லா பழங்களையும் தோலுடன் உண்ண முடியாது. ஆனால் தோலுடன் உண்ணக்கூடிய பழங்கள் பட்டியல் மிகவும் பெரியது
வாழைப்பழம் (Banana Skin To Control Diabetes) நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் வாழைப்பழத்தோல்,சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மற்றும் அதை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்க உதவும்.
ஆப்பிள் (Apple Skin To Control Diabetes) நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஆனால் அந்த ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும். தோலில் உள்ள சிறப்பு பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு நோயின் பிற சிக்கல்களையும் அகற்ற உதவுகின்றன.
கொய்யா (Guava Skin To Control Diabetes) சிலருக்கு கொய்யாவை தோலுரித்து சாப்பிடும் பழக்கம் இருக்கும், ஆனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறப்பு குணங்கள் கொய்யாப்பழத்தில் உள்ளது எனவே, கொய்யாவை உட்கொள்ளும்போது தோலுடன் உண்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
பீச் (Peach Skin To Control Diabetes): நீரிழிவு நோயாளிகளுக்கு பீச் ஒரு நல்ல பழம் என்று கூறப்படுகிறது, ஆனால் அதை தோலுடன் மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. தோலை சேர்த்து சாப்பிடுவதால், இந்த பழத்தின் நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் அதிகரிக்கிறது, மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்