ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா... உடல் எடை குறைப்புக்கு கைக்கொடுக்கும்!
ஸ்ட்ராபெர்ரியின் பெயரை கேட்டாலே பல பேருக்கு நாக்கு நாட்டியமாடும். அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழத்தை சாப்பிட்டவர்கள், அதன் தனித்துவமான ருசிக்காகவே மீண்டும் மீண்டும் உண்பார்கனலாம்.
ருசிக்காக மட்டும் ஊட்டச்சத்துக்களுக்காகவும் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடலாம். அதில் வைட்டமிண் C,மேக்னீஸ், ஃபோலேட், பொட்டாஸியம் ஆகியவை உள்ளன. ஆண்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
அந்த வகையில், ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நான்கு ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வட்ஸ் கூறியதை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.
கண்பார்வை மேம்படும்: இதில் வைட்டமிண் C, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் கண்பார்வையை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை அளிக்கும். அதேபோல், தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டுவந்தால் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் கண் சார்ந்த பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இதயத்திற்கு நல்லது: ஸ்ட்ராபெர்ரியில் ஃபிளாவனாய்டு, பொட்டாஸியம் மற்றும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வரும் ஆபத்து குறைகிறது. ஆண்டிஆக்ஸிடன்ட்களும் இதயத்திற்கு நல்லது.
உடல் எடையை குறைக்க உதவும்: ஸ்ட்ராபெர்ரி குறைந்த கலோரி மற்றும் அதிக ஃபைபர் கொண்ட பழமாகும். இதை சாப்பிட்டால் உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசியே எடுக்காது, வயிறு நிறைந்த உணர்வை தரும். இதனால் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள். இதை நீங்கள் தொடர்ச்சியாக கடைபிடித்து வந்தால் உடல் எடை குறைய தொடங்கும். இதோடு உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறும்: இதில் வைட்டமிண் C அதிகம் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. வைரல் தொற்றுகள் போன்றவை உடன் சண்டையிட்டு ஆரோக்கியத்தை பேணிக்காக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியம்.
பொறுப்பு துறப்பு: இதை வாசித்த வாசகர்களுக்கு நன்றி. இந்த தகவல்கள் அனைத்தும் உங்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டவை. இதை ஊட்டச்சத்து நிபுணர் கூறியிருந்தாலும், இதனை பின்பற்றும் முன்னர் நீங்கள் தனியே உங்களின் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.