காலை எழுந்தவுடன் வயிறு சுத்தமாக இரவு பாலில் இதை கலந்து குடியுங்கள்
காலையில் மலம் கழிப்பதில் சிரமம் இருந்தால், இரவு தூங்கும் முன் பாலில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடிக்கவும்.
ஒரு டம்ளர் பாலில் தேன் கலந்து குடிக்கலாம். தேன் மற்றும் பால் கலவை வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது மலத்தை வெளியேற்ற உதவும்.
மஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அஜீரண பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். இதற்கு 1 கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடிக்கவும். இது வயிற்றை சுத்தம் செய்ய உதவும்.
ஒரு கிளாஸ் பாலில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து குடிக்கவும். இதன் மூலம் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். காலையில் உடனடியாக வயிற்றை சுத்தம் செய்ய முடியும்.
இரவு 1 கிளாஸ் பாலில் 4 முதல் 5 பேரீச்சம்பழம் சேர்த்து, சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் காலையில் வயிறு நன்றாக சுத்தமாகும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.