இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் இருக்க..‘இந்த’ 5 காய்கறிகளை சாப்பிடுங்கள்!

Sat, 27 Jan 2024-2:50 pm,

இருதயத்தில் அடைப்பு ஏற்படுதல், உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகளுள் தீவிரமான பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக மருத்துவ ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால் இந்த பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இருதய அடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நாம் வாழ்வியல் முறைகளை மாற்றி, ஹெல்தியான காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி, உடலுக்கும் இருதயத்திற்கும் நன்மை விளைவிக்கும் காய்கறிகளின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

பச்சை காய்கறிகள், நமது இதயத்தை பாதுகாப்பதில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. இந்த காய்கறிகளில் வைட்டமின் சத்துக்கள், கனிமங்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் சத்துக்கள் நிறைந்து இருக்குமாம். குறிப்பாக பெரும்பாளை கீரை, கேல் கீரை உள்ளிட்ட கீரை வகைகளில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் பல சத்துக்கள் உள்ளதாம். இதனால் உடலில் உயர் ரத்த அழுத்தம் குறைண்டு இருதய ஆரோக்கியம் சிறக்குமாம். 

பார்ப்பதற்கு மரம் போல இருக்கும் புரோக்கோலி எனும் காய்கறியும் இதயத்திற்கு நன்மை பயக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் ஃபைபர் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதயத்தை பாதுகாக்கிறது. 

நமது சமயலறையிலும் சமையலிலும் தினம் உபயோகப்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்று தக்காளி. இதில் உள்ள லைகோபீன் எனும் சத்து இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதயம் சம்பந்தமான நோய் பாதிப்புகளை தடுக்கவும் தக்காளி உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

அவகேடோவை பழமாகவும் காயாகவும் பலர் சுவைப்பதுண்டு. இதில், இதயத்தை பாதுகாகும் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதாம். அது மட்டுமன்றி, இதில் உள்ள பொட்டாசிய சத்துகள் உடலில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தையும் கட்டுப்படுத்த உதவுமாம். 

பீட்ஸா, பாஸ்தா போன்ற அயலக உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் குடை மிளகாயிலும் ஆயிரம் ஆயிரம் நற்பண்புகள் நிறைந்துள்ளதாம். ஃபைபர் சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள இந்த காயை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது என கூறுகின்றனர், மருத்துவர்கள். இது, இருதய நோய் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

நிறைய காய்கறிகளை உங்களது அன்றாட டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது என்றாலும், இதிலும் கவனம் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். இருதய நோய் ஏற்படாமல் தடுக்க, இருதய அடைப்பு ஏற்படாமல் தடுக்க மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை விட்டொழிப்பது சிறந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், சரியான டயட், மன அழுத்தத்தை சரி படுத்துதல், தினசரி உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link