இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்படியானால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
நிம்மதியான தூக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
இன்றைய உலகில் நிம்மதியான தூக்கம் என்பது பலருக்கும் கனவாகி விடுகிறது, இதற்கு அவர்களின் உணவுப் பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது.
இரவு தூங்கும் முன்பு சூடான பால் குடிப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும். இது ஒரு முழுமையான உணவாகக் கருதப்படுகிறது. பாலில் கால்சியம் தவிர, தூக்கமின்மையை போக்க ஒரு பாரம்பரிய தீர்வாகும்.
இரவில் நன்றாக தூங்க செர்ரிகள் உதவுகிறது. செர்ரிகளில் வைட்டமின் சி, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் நிறைந்துள்ளன.
இரவு முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. முட்டையில் உள்ள புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நல்ல தூக்கத்திற்கு உதவுகின்றன.
பாதாம் போன்ற கொட்டைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது. .பாதாம், பிஸ்தா சாப்பிடுவது இரவில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன்கள் மெலடோனின் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த மீன்களில் வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளது. இவை நல்ல தூக்கத்திற்கு உதவும்.