ரத்த நாளங்களில் இருக்கும் கொலஸ்ட்ராலை... இந்த 5 பழங்கள் கரைத்துவிடும்!
ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் அதிகம் தேங்கினால் அடைப்பு ஏற்படும். அந்த வகையில், சில பழங்களை தினமும் சாப்பிட்டால் அந்த கொலஸ்ட்ரால் கரைந்துவிடும்.
இதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அந்த வகையில், இந்த 5 பழங்களை சாலட்டாக தினமும் சாப்பிடுங்கள். அதன்மூலம், உங்களுக்கு சில நாள்களிலேயே வித்தியாசம் தெரியும்.
அவகாடோ (Avocado): இதில் beta-sitosterol அதிகம் இருக்கிறது. கூடவே, ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை கரைக்க உதவும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
பாதாமி பழம் (Apricot): இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள கற்களையும் நீக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாஸியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும், இது இதயத்திற்கும் நல்லது.
பேரீச்சம்பழம் (Dates): இதில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. மேலும் இது ஹீமாகிளோபின் அளவை அதிகரிக்க உதவும். கொழுப்பை குறைக்கவும் உதவும்.
ஆப்பிள் (Apple): இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. மேலும், polyphenols எனப்படும் நுண்ணுயிர்களும் அதிகம் இருக்கும். இது கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவும். இதயத்தில் உள்ள அடைப்புகளையும், மூளைக்குள் உள்ள அடைப்புகளையும் சீராக்கும்.
மாதுளை (Pomegranate): இதனை நீங்கள் விதைகளுடன் சாப்பிட வேண்டும். இது ரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலை எடுக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.