மாங்காயை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா... கெட்டதா... இதை பாருங்க!
மாங்காயில் வைட்டமிண் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
மாங்காயில் குடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியா இருக்கிறது. எனவே இது உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
மாங்காயை பச்சையாக சாப்பிடும்போது அதில் துவர்ப்பு சார்ந்த குணங்கள் அதிகமிருக்கும். இதனால் உங்கள் வாயில் பிரச்னை வராது. குறிப்பாக, வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதையும் குணமாக்க உதவும்
பச்சை மாங்காயில் செரிமானத்திற்கு தேவையான நொதிப்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் உணவை எளிதாக செரிமானம் செய்து, செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
பச்சை மாங்காயில் வைட்டமிண் ஏ இருப்பதால் இது கண்களுக்கும் நல்லதாகும்.
பச்சை மாங்காயை சாப்பிட்டால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொது தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.