இந்த 4 உணவுகளை தினசரி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்!
இன்றைய உலகில் மோசமான உணவு பழக்கம் காரணமாக பல நோய்கள் ஏற்படுகிறது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வந்துவிட்டால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அடிக்கடி நெஞ்சு வலி, தலைச்சுற்றல், தலைவலி போன்றவை ஏற்பட்டு மாரடைப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
தவறான உணவு பழக்கம் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது. எனவே உயர் அதிக இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கீரை, கோஸ்போன்ற பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் கண்டிப்பாக இவற்றை சாப்பிட வேண்டும்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
அதே போல பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது இரத்த அழுத்தத்திற்கு நல்லது. பூண்டு ஆன்டி-பயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பை அதிகரிக்கிறது.