சுகர் லெவலை குறைக்க நிச்சயமாய் உதவும் வீட்டு வைத்தியங்கள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
சர்க்கரை நோய் என்பது குணப்படுத்த முடியாத நோயாகும். ஒருமுறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. இதனை மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் மூலம் கட்டுப்படுத்தினால் மட்டுமே தவிர்க்க முடியும். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
சர்க்கரை அளவைக் குறைக்க வேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேப்பிலையை உலர்த்தி பொடி செய்து அதை உட்கொள்ளலாம். இது தவிர வேப்பிலையை அப்படியே பச்சையாகவும் கடித்து சாப்பிடலாம். வேப்பிலை இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகளை அதிகமாகக் கொண்டுள்ளது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் மசாலாக்களில் இலவங்கப்பட்டை மிக முக்கியமானது. இது இன்சுலின் உற்பத்தியை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். சுகர் நோயாளிகள் தினமும் காலையில் இலவங்கப்பட்டை தேநீர் குடிக்கலாம். இது தவிர இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றது.
பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் ஒரு ஆரோக்கியமான காயாகும். நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி இதனை தங்கள் உனவில் சேர்ப்பது நல்லது. சுகர் நோயாளிகள் தினமும் காலையில் பாகற்காய் சாறு குடிப்பது நல்லது. இதன் மூலம் நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
வெந்தயத்தில் உள்ள பண்புகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். இதை இரவில் ஊற வைத்து காலையில் இதன் தண்ணீரை குடிக்கலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். வெந்தய நீர், வெந்தய பொடி, வெந்தய விதைகள் என அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நீரிழிவு நோயாளிகள் கிலோய் சாறு குடிக்க வேண்டும். இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கிலோயின் இலைகள் மற்றும் தண்டுகள் கொண்டு இதன் சாறை உருவாக்கலாம். கிலோய் சுகர் நோயாளிகளுக்கு மிக நல்லதாக கருதப்படுகின்றது.
கிராம்பு பல வித அரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு மசாலா ஆகும். இதில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. கிராம்பு இன்சுலின் சென்சிடிவிடியையும் மேம்படுத்துகிறது. சுகர் நோயாளிகள் டீயில் கிராம்பு சேர்த்து குடிப்பது நன்மை பயக்கும்.
துளசி பல வித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து காக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.